உள்ளத்தில் உதிப்பவை – 1

தந்தா தா நானே நானே
தந்தா தா நானே நானே
தந்தா தா நானே நானே
நானே நானே நா......

கொளிஞ்சி வெதச்ச வயலு
பூவாப் பூத்து நிக்க
மயிலக் காள ரெண்டு
ஏரில் பூட்டி நிக்குதே....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

சேரா வயல் இருக்க
என் செம்பவளப் பூவிருக்க
தெம்பா நான் இருக்க
சவுனா பரம்பு அடிப்பேனே....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

வகையா பாத்தி கட்டி
நெல்ல வெதச்சு விட்டா
மூவேழு நாளுக் குள்ள
வகையா வளந்து நிக்குமே....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

பாத்தி விட்டு எடுத்து
நாத்த தொட்டு எடுத்து
பாதம் பதிக்கும் முன்னே
நல்லா கொளவை யிடம்மா....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

பாதம் பதியப் பதிய
எள நாத்த பதிச்சவளே
நாத்து பதிவது போல்
எள மனசில் பதிஞ்சவளே.... அடியே......

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

ஏத்தம் அத நானிறைக்க
நீமானே மட திறக்க
நாளும் வயல் நெறைய
குறையா வளம் பெருகுமே....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

ஆடி வெதைக்கும் நெல்ல
தை அறுக்கும் நெல்ல
பசியத் தீக்கும் நெல்ல
நாளும் மறக்க லாகுமா....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

- கிரி பாரதி

எழுதியவர் : செ.கிரி பாரதி (22-Jul-16, 4:36 pm)
பார்வை : 226

மேலே