தாலாட்டும் நினைவுகள்

பாலூட்டிய அன்னையின் கரங்கள்
பண்பூட்டிய தந்தையின் நெஞ்சம்
பாசமூட்டிய பெரியோர் பலரும்
தாலாட்டும் நினைவுகள் என்றும் !

போதித்த ஆசானின் அறிவுரை
சாதித்த மூத்தோர் வழிமுறை
வாதித்த நண்பனின் செய்முறை
தாலாட்டும் நினைவுகள் என்றும் !

வாசித்த நூல்களின் வைரவரிகள்
யோசித்த நேரங்களின் நிகழ்வுகள்
நேசித்த நெஞ்சங்களின் நெகிழ்வுகள்
தாலாட்டும் நினைவுகள் என்றும் !

காற்றோடு கலந்திட்ட முன்னோர்கள்
சேற்றோடு நடந்திட்ட விவசாயிகள்
காலத்தோடு பயணிக்கும் கீதங்கள்
தாலாட்டும் நினைவுகள் என்றும் !

மாணவப் பருவத்தின் பொழுதுகள்
இளமைக் காலத்து இன்பநேரங்கள்
முதுமை நேரத்து முன்னோட்டங்கள்
தாலாட்டும் நினைவுகள் என்றும் !

பொலிவாக உள்ளவரை எண்ணங்கள்
வலிவாக இருந்தவரை செயல்பாடுகள்
நலிவாக நாமிருந்தால் வரும்ஏக்கங்கள்
தாலாட்டும் நினைவுகள் என்றும் !

காலத்தே பதிவிடும் கவிதைகளால்
ஞாலத்தில் பெறுகின்ற விருதுகளும்
வானத்தில் நம்முயிர் கலக்கும்வரை
தாலாட்டும் நினைவுகள் என்றும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Jul-16, 8:28 am)
பார்வை : 517

மேலே