அகரம் நீ~ஆதர்ஷ்ஜி

அகரம் நீ~ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
உன் மூச்சுக் காற்றில் பரவிய கனவுகள் விழுந்தன கணக்கில்லா மனங்களில் விதைகளாய்.
உன் பேச்சிலும் செயலிலும்
ஆழ்ந்திருந்தன
அவ்விதைக்கான
வெப்பமும் நீரும்.
வளர்ந்திடும் ஓர் அடர் காடாய்
அன்பும் அறிவும் மனிதமும்
சிகரமாய் சிறந்திடும் பாரதம் -அதன்
அகரமாய் நீயிருப்பாய் என்றும்
~ஆதர்ஷ்ஜி
(இன்று 27.7.2016 கலாம் ஐயா முதல் நினைவுநாள் )