சந்திரனை தொட்டது நான்

பல சந்ததியை பார்த்த
சாதனையாளனே என் தாயும்
உன் உதவி நாடுவாள்
தன் சேயின் நலனுக்காக !
சேயின் பசியை போக்கி
தாயின் உள்ளத்தை குளிர
வைத்தவனே ! குழந்தைகளின் தலைவனே !
என்ன முடியாத நட்சத்திரங்களின்
நடுவில் எழில் மிகு
அழகுடன் விளங்கும் புரண
கால கதாநாயகனே !
சில நேரம் உன்னை பார்த்தால்
சிதைந்து போகும் என் கவலை !

உன்னை தொட்டு பார்க்கும்
ஆசை தீர்ந்து போனது
இந்த கவிதையால் !

நிலவை ரசிப்பவர்களுக்கு இந்த வரிகள் சமர்ப்பணம்

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (27-Jul-16, 3:16 pm)
பார்வை : 53

மேலே