காதல் கொலை

வார்த்தைக்கு கூட உன்னை காதலித்தே கொல்வேன்
என்று சொல்லி விடாதீர்கள்
அன்று அது காதல் மொழி
இன்றோ அதுவே வாக்குமூலம்...
மதியாதார் தலைவாசல்
மிதியாதே என்பது முதுமொழி...
மதியாதார் தலையை வெட்டி
மிதி என்பதுதான் புதுமொழியோ...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
புரியவில்லை எனக்கொன்று மட்டும்...
காதலை கொன்றுவிட்டு
காதலித்தவரை கொல்கிறார்களா இல்லை
காதலித்தவரை கொன்றுவிட்டு
காதலை கொல்கிறார்களா....
புரியவில்லை இஃதொன்று மட்டும்...
ஒருத்தி பழித்ததை மன்னித்திருந்தால்....
ஊர் இன்று பழிக்காது....
உறவுகள் பிரிந்திருக்காது...
உனக்கின் நிலை வந்திருக்காது...
நேசித்தவரையே கொல்வது தான் நேசமா...
உண்மை காதல் என்பதெல்லாம் பொய்யின் வேசமா...
உயிர் இரக்கம் தான் காதல் என்றால்...
உயிர் இறக்க காரணமாவது காதலாகுமா?
இளைஞர்களே! இளைஞர்களே!
காதலென்ற வார்த்தையின் அர்த்தம் புரிந்து
காதலிக்க தொடங்குங்கள்...

எழுதியவர் : மோகு (27-Jul-16, 3:50 pm)
Tanglish : kaadhal kolai
பார்வை : 108

மேலே