ரோஜா முள் காதலன்

அன்பே
நீ தானே ரோஜா செடி
பூக்களென மலரும் உன் அழகை
நான் மட்டுமே ரசிக்கிறேன்
செடியின் முள்களாக ....

நீயே மலர்ந்து
நீயே சூடி ஓய்ந்த பின்னர்தானே
மற்ற அழகு தேவதைகளெல்லாம்
சூடி மகிழ்கிறார்கள்
ரோஜா மலரென!

அவர்களெல்லாம் பூவை
சூடினாலும்
முள்களாய்
நான் தானே உனை கட்டிக்கொண்டேன்
என்றும் உன் காதலனாக ......

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (28-Jul-16, 12:00 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : roja mul kaadhalan
பார்வை : 143

மேலே