கவிஞர் வாலி

வாழ்கையின் வலிகள்
காதலின் வலிகள்
சமூக ஏற்த்தாழ்வின்
வலிகளையும்
தன் விழிகள் கண்ட
கொடுமைகளையும்
தன் கவிதைகளின்
கருப்பொருளாய்
சமூக மாற்றத்திற்கு
ஈட்டிகளாய்
பாய்ந்தன

வாலி
இவர் தமிழின்
ஆழி
வேலி
புலி
சினிமாவில்
நல் சிந்தனை
தந்தவர்
தமிழ் ஈழத்தையும்
தலைவரையும்
புகழ்ந்து
கவி பாடிய
ரங்கராஜன்

புதுக்கவிதை
தந்த புனிதன்
இனிதன்
பல கவிஞர்களுக்கு
குருவாய்
தமிழ் குலம் காத்த
கவிஞர் இவர்

நான் ஆனையிட்டால்....
இந்தப்பாடல்
பலரின் மனங்களில்
பதிந்தது
புரிந்தது
இதுபோல் பல

பாடல்களில்
புதுமைகளும்
ஆண்
பெண்ணின்
வலிகளையும்
சூட்சுமத்தோடு
வாழ்வின் எதிர்காலத்தை
எதிர்வு கூறும்
தீர்க்கதரிசி

தன் வரிகளில்
நல் விருந்தையும்
துன்பங்களுக்கு
மருந்தையும்
தமிழ் பாலாய்
ஊட்டியவர்

நெஞ்சே எழு என்றும்
அனைத்தும்
முயற்சித்தால்
முடியுமென்றும்
தத்துவத்தை
தரணியில்
விதைத்தவர்
இவர் புகழ்
என்றும் அழியாது

எழுதியவர் : சாதனையாளர் (28-Jul-16, 12:18 pm)
Tanglish : kavignar vaali
பார்வை : 97

மேலே