என் தேவதை
ஆறடி உருவமும் அடங்கியது
இரண்டடி உருவம் அல்லா
அவளின் புன்னகையில்.......
அவள் புருவ விரிப்பில்
அகண்டது என் ஆனந்த உலகம்....
அழு குரலில் இடிந்தது
என் இதயம்.....
அவள் தவழ - சிகப்பு கம்பளம்
கரடு முரடான
என் தேகம் ......
நடை பழக அவளுடன்
நானும் பழகிய
சின்ன சின்ன நடைகள்.......
மழலை மொழியில் - அப்பா
மறுபடி மறுபடி என் சிந்தையில்
யார் உரைப்பதும் காதில் விழாமல்.....
என் தேவதை - மலர் முகம்
பூக்கள் கூட தோற்றுத்தான் போகும்
அவள் சிரித்த முகங்கள் கண்டு......
அவள் வளர நானும் வளர்ந்தேன்
அப்பா என்ற குழந்தையாய்
அவளிடம்.......
குமரியாய் அவள் - ஏனோ
ஒரு இடைவெளி
என் தேகங்கள் சுருங்க
என் தேவதை கரம்பிடித்து கொடுத்தேன்
அவளுக்கான இளவரசனிடம்......
அவள் பிரிவு நிரந்தரமாய்
அழுகை வந்தும்
மறைத்து சிரித்தேன்
அவள் மகிழ......
என் கரம் பற்றி வளர்ந்தவள்
கரங்கள் வெகு தொலைவில்.......
காத்திருக்கும் என் கண்கள்
அவள் வருகையை எதிர்நோக்கி!!!!!....
-மூ.முத்துச்செல்வி