தலை மகன்

உன் தலை மேல் எத்தனை சுமைகள்
தவமிருந்து பெற்றதால்தானோ உன்னை
தள்ளாட வைக்கும் குடும்ப சூழ்நிலை !

இன்னும் உடன்பிறப்புகளை உயர்த்தும்
எண்ணம்தான் உன் மாறாத உள்ளத்தில் !

கலங்கி விடாதே !

அல்லாஹ் !
ஒரு நாள் உன் கனவுகளையும்
நிறைவேற்றி தருவான் !

அன்று எல்லோர் உள்ளத்திலும்
உயர்ந்த மனிதனாய் !

நீ ! குடும்பத்தின் "தலை மகனாய் " !!


ஸ்ரீவை.காதர்

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (25-Jun-11, 12:33 pm)
பார்வை : 465

மேலே