பரிசு பெற்ற மனநிலையில் என் நன்றியும் & வேண்டுகோளும்

படைத்ததற்காக கிடைத்ததாம்
படைப்பவர்களுக்க்கும் கிடைக்கட்டும்
பாராட்டுதல்கள் எனக்கு கிடக்கின்றது
பாரட்டுபவர்களுக்கும் அது கிடைக்கட்டும்
எழுத்தில் எனக்கும் கிடைத்தது
எழுத்தில் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
சிறப்பான கவிதைக்காக கிடைத்ததாம்
சிறப்பான கவிதை இனி தருவதற்கே கிடைத்தது


எதார்த்தமான வரிகளே
எப்போதும் வெல்லுமென்று
என்னிடம் கூறுகின்றார்
இது கூட உண்மைதான்
உங்களுக்கும் அப்படியே
உள்ளம் திறந்து சொல்லுகின்றேன்
ஒவ்வொரு கவிதையும் சிறப்பாக்குங்கள்
உங்கள் வாசகனாய் நானிருப்பேன்

புது கவிதை பாணிக்கு கிடைத்தது
போற்றுகின்றேன் எழுத்தின் சேவை
மரபு கவிதை பாணியிலும்
மறைந்த பலர் கவிதைகளை
எழுத்தினிலே வளமேற்றி
எந்நாளும் புகழாக்கி
பரிசு தந்த பேருள்ளத்திற்கு
பலமுறை நாம் வாழ்த்தலாமே !


இணைய தளத்தில் எப்போதுமே
எங்கிருந்தாலும் எல்லோருக்கும் கிடைக்க
சாதி மத எல்லை கடந்து
சங்க தமிழின் பெருமை விரிந்து
கணினி மட்டும் இருந்தால் போதும்
கன்னி தமிழாய் என்றும் இருக்க
எழுத்து.காமின் இணையற்ற சேவையை
எந்த வார்த்தையிலும் புகழ முடியாமல்
பல பல கவிதைகள் வழியே
பலரும்தாம் போற்ற வேண்டுகிறேன் !



அறிமுகமில்லாதவர்கள் கூட
ஆகாவென்று புகழும்போது
புதுமுக நட்பை தந்து
போற்ற வைக்கும் மனநிலையில்
இன்னொன்றை சொல்லுகின்றேன்
என் "நட்பை பற்றி சில சொல்லில்"
படித்துவிட்ட போதினிலும்
பலவீனமான நண்பனே நான்
பழகவரும் புது நண்பர்களை
பத்திரமாக என்னை பார்த்து கொள்ளுங்கள்!





எழுதியவர் : . ' .கவி (25-Jun-11, 9:54 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 340

மேலே