நீ வெல்வாய்

எந்த ஒரு வியர்வைக்கும்-வெற்றி
ஒருநாள் வேர்வைக்கும் :வாலி
தந்த இவ்வரிகள் அனுபவத்
தாயின் ஆற்றல் மொழிகள்
கண்விழி வாட உழைத்தால்
களிவுறும் நம் விழிகள் -வியர்வை
என்பது வெற்றியின் அழுகை- தோல்வி
என்பது வியர்வையின் கண்ணீர்

முதுகினை வளைத்து வேலைசெய் -அது
முதுமையை இளமையாய் காட்டும்
காதுமடல் போல்மனம் கொள்- தவறு
காற்றில்லா தீபோல் மங்கும்
சாதிக்கத் திடமாய் இரு -உம்புகழ்
சுடர்போல் ஒளிரும் எங்கும்
விதியை மதியால் நீமாற்று - அன்று
வெற்றி உன்னிடம் தங்கும்

வானம் மீப்பெருந் தூரம்தான் -இறகு
வீசி நீபறந்தால் பக்கம்தான்
விண்ணில் உன்பெயர் பதி -உன்னை
வாங்கி வசமாக்கும் அம்மதி
மண்ணில் உம்புகழ் ஓதி -மகிழ்ந்து
மேன்மையுறும் தமிழ்சாதி:புவியில்
அணுவும் ஆற்றலும் தீர்ந்தாலும் -உன்பெயர்
ஆகாது என்றும் காலாவதி

எழுதியவர் : பாஸ்கரன் து (3-Aug-16, 6:09 pm)
சேர்த்தது : பாஸ்கரன் து
பார்வை : 239

மேலே