காலம் உன் கையில்
மனிதா மனிதா முன்னேறு -வியர்வை
முத்துக்களில் கோலமிடு விண்ணோடு
உன்னை வெல்ல யாருமில்லை -இனி
அந்த வான்தான் உன் எல்லை
மண்ணின் பொறுமை கொள்-அந்நிய
மானிடன் பெருமையை வெல்
விண்ணும் உம்புகழ் பாடும் -புவியில்
வெற்றி உன்னை நாடும்
கனவில் வெல்ல துணியாதே -சிந்தும்
கண்ணீரால் நெருப்பு அணையாதே
வானவில் கையில் பிடிக்க -அந்தி
வேளை வரை ஏங்காதே
மனதில் முயற்சி இருக்க -தோல்வியை
மாரினில் எதற்கு சுமக்க ?
கண்ணில் கனவுகள் தெரிய -நம்
கடமைதான் சாதனை புரிய
இலட்சியம் அடைவதற்கு முன்னே -மனிதா
இளைப்பாறாதே :ஆழியில் சேரும்
காலம்வரை நதிகள் நில்லாதே -புவியில்
காற்றுள்ளவரை கதிரவன் கண்மூடாதே
நாளையை எண்ணி அஞ்சாதே -இன்றைய
நல்லுழைப்பு நாளைய அறுவடை
உலகின் சரிதத்தில் உன்னிடமுண்டு -அதனை
அடைவதே சீரிய உன்தொண்டு