இல்லை என்பதில்லை....



இருப்பின் சிறப்பு,
இறப்பில் அறிந்தேன்....

இறப்பின் மகத்துவம்,
இயற்கையின் தனித்துவம்....

இறப்பை வெல்லும் இரகசியம்,
இருப்பில் கரைந்த பொழுது....

தந்தையின் தற்கொலை,
இரகசியங்களின் இரகசியம்.....

அறியமுடியாததிலிருந்து,
அறிந்த ஒன்று-
அறிந்து கொள்ள ஏதுமில்லை....
அறிந்த பின்னும் ஏதுமில்லை.....


இல்லையென்ற...
ஒன்றிருக்கும் வரை,
ஒன்றிருந்து கொண்டேயிருக்கிறது,
இல்லையென்று மறுப்பதென்பது....

இருப்பின் நிரந்தரத்தை உறுதிசெய்யவே....

எழுதியவர் : ரமண பாரதி (25-Jun-11, 2:53 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 411

மேலே