கைப்பிடியில்லா வாள்...
![](https://eluthu.com/images/loading.gif)
நழுவிக் கொண்டேயிருக்கும்...
காலத்தை நினைவிடுக்கில்-
மீளப்பெறும் அவசரத்தில்,
தவறிய மணித்துளிகளை...
சிதறாமல் கவர்ந்த பொழுது,
காதோர நரைமுடி-
இழந்ததையும்,
கதவோர கவித்தொகுதி-
பெற்றதையும்,
ஒருசேர அவதானிக்கும்...
எண்ணங்கள் குவிந்த மனதோடு,
கணப்பொழுதாய் கரையும் நாள்-
என் உயிரறுக்கும் வாள்.....