தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 56 = 183

“கருமேக வானம் கலந்தாடும் நேரம்

இருளோடு இருளாக நீ இங்கு வரனும் !”

மனம்போல பாடி மார்போடு கூடி

உறவோடு உறவாடி உயிர் கலக்க வேணும் !”


மனித கனவுகள் யாவும் கானலை போல

மனக்கன்னில் தோன்றி மாயமாய் மறையும் !

எதையும் முடிவோடு செய்தால் முறையாக நடக்கும்

எதுவும் முறைதவறி நடந்தால் முரண்டுகள் பிடிக்கும் !

மலர்போன்ற முகத்தாள் மாங்கனி நிறத்தாள்

அகத்தோடு அகமாய் ஆழ்நெஞ்சில் குளித்தாள் !

கொடுக்கின்ற கரத்தான் கொள்கையில் சிறந்தான்

ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டான் !

எழுதியவர் : சாய்மாறன் (5-Aug-16, 6:19 pm)
பார்வை : 105

மேலே