இரவுகள்

கதிரவன் அஞ்சலிக்கு
வெள்ளி நிலவை கண்டுகொண்டு
உடுக்கள்கள் ஒளிவீசி கொள்கிறது - அதில்
சிலதுகள் மின்னிமின்னி மறைகிறது!

பூயிதழின் விளிம்பல்களில்
பூ போன்று பனித்துளிகள்
யாரிடமும் சொல்லாமல் அமர்கிறது - அதில்
யாருக்கு துன்பங்கள் விளைகிறது??

பலகோடி விண்மீன்கள்
பளிச்சென்று ஒளி கொண்டு
அடிவானம் வர்ணத்தில் ஜொலிக்கும்-அதனை
ஆயிரம்பூ கண்விழித்து பார்க்கும்!

விடியலுக்கு வரமின்றி
வந்த இருள் எடுத்ததனால்
இரவுக்கு மட்டுமிந்த அழகு - இதனை
இதயத்தில் வரவேற்றி பழகு!

மேகத்தை போர்வைகளாய்
மணந்து கொண்ட மலைக்கு
ஒளியூட்டி நிற்கிறது நிலவு - இதனால்
உள்ளத்தில் கோடிமலர் விளைவு!

பக்கத்தில் காதலியை
மஞ்சத்தில் பங்கிட்டு நாங்கள்
காமத்தின் உச்சிக்கே போவோம் -அதை
காட்சிகளாய் இரவுக்கே கொடுப்போம்!

மனதோரம் ஒலிகின்ற
மங்காத துன்பத்தை இந்த
இரவுகள் தனிபாதி எடுக்கும் - அதில்
இன்பங்கள் சரிபாதி பிறக்கும்!

இங்கிருக்கும் அமைதியையும்
இந்த ஒரு அழகினையும்
விடியலுக்கு கிடைக்காமல் போகுதே-அதனால்
விடியல்தான் காலையில் சிவக்குதே!!

உள்ளூருவும் நினைவையும்
உருயில்லா உணர்வையும்
கூட்டுவிக்க வந்ததென்ன இரவு - இது
இல்லாமல் எனக்கெனன உறவு!!

எழுதியவர் : (5-Aug-16, 3:29 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : iravugal
பார்வை : 172

மேலே