முதிர் கன்னி
நான் கண்ட வண்ணக் கனவுகள் யாவும்
எப்போது நிஜமாவது?
ஆழ்மனக் கடலில்
எழுந்த ஆசைகளை எல்லாம்
எவரிடம் சென்று
நான் பகிர்ந்து கொள்வது?
இராமனிடமா?
இல்லை - இலங்கை
இராவணனிடமா?
என்னை விரும்பி
கடத்திச் செல்பவன்
யாரக இருந்தாலும்...
சீதையாகவே...
நானிருப்பேன்...!
தேன் நிலவுக்குச் செல்ல
இன்னும் பல காலம்
என்னால் காத்திருக்க முடியாது...!
ஏனெனில்...
வசந்த காலம் என்பது
எனக்கு முடியப் போகிறது...!
அதற்குள் வந்து
முதிர்கன்னி எனை - யார்
மனைவியாக்குவது...?!