நண்பர்கள் தின வாழ்த்து என் நண்பனான அன்பனுக்கு
பள்ளி என்னும் முதல் உலகில்
என் அன்பிற்கு கிடைத்த முதல்
நம்பிக்கை -நீ
பெற்றோரை நான் பிரிந்து
கண்ணீரால் நான் நனைய
உன் சோகம்தனை மறைத்து
அழுவாத அம்மா வந்துடுவாங்க
என்று முதலில் ஆறுதல் கூறிய
என் அன்பின் துணைவன் -நீ
சோறுண்ண அறியா பருவத்தில்
உன் சோற்றை விட்டுவிட்டு
என் சோற்றை எடுத்து எனக்கு
ஊட்டி இப்படித்தான் சாப்புடு
என்று எனக்கு கற்றுக் கொடுத்த
முதல் ஆசான் -நீ
என்னை தடுக்கி விட்டு விழவைத்து
பின்பு தூக்கி நிறுத்தி
கண்ணை துடைத்து
விளையாட்டு காட்டிய
என் குறும்புக் கார தோழன் -நீ
என் வெற்றிகளை நீ கண்டு
மார் தட்டி ஊர் பரப்பும்
என் உண்மை தோழன்
என்றும் நீ நீயே !!!!!
உனக்கு என் நண்பர்கள்
தின வாழ்த்தும் என்
அன்பின் முத்தங்களும் !!!!!!!!!!!!!

