நான் காண்கிறேனே
பகலில் வட்டமிடும்
நிலவினை கண்டதில்லை யாரும்
நான் காண்கிறேனே
உன் முகத்தை
மீண்டும் மீண்டும் மலரும்
பூவிதழ்களை கண்டதில்லை யாரும்
நான் காண்கிறேனே
உன் இதழ்களை
ஒரே இடத்தில் சிறகடிக்கும்
பட்டாம்பூச்சியை கண்டதில்லை யாரும்
நான் காண்கிறேனே
உன் இமைகளை
மயில் இல்லாமல் ஆடும்
தோகையை கண்டதில்லை யாரும்
நான் காண்கிறேனே
உன் கூந்தலை
உயிரோடு நடமாடும்
சித்திரத்தை கண்டதில்லை யாரும்
நான் காண்கிறேனே
உன்னை
இதயமில்லாமல் வாழும்
மனிதனை கண்டதில்லை யாரும்
நான் காண்கிறேனே
என்னை !!