விதவையின் மறுமணம்

திருமணத்தில் முடிந்த
இனிய நிகழ்வு
கண் பட்டுக் கருகியதே
காலன் வந்து கணவனை
அழைக்க ....................


மணக்கோலம் ஏனோ அவளுக்கு
மாறுவேடம் போல்
மாறியதே !!!!!!!!!


புதுமாப்பிள்ளையாய் பார்த்த
மாமனாரின் கண்கள்
பூத்துப் போயின அவனது
புகழுடம்பைக்
கண்டவுடனே....................


மாப்பிள்ளையை மகனாக
காண நினைத்த
மாமியாரின் விழிகள்
இறந்த உடலைக் கண்டு
இமைக்க மறந்து மறுத்து
போயினவே.............


கட்டியக் கணவனையே
கடவுளாக எண்ணிய
மனைவியின் இதயம்
மூச்சற்ற உடலைக் கண்டு
மூச்சு விட
மறந்ததுவே ............

புது மாப்பிள்ளையால் வரும்
புது வரவான வாரிசை காண
விரும்பிய சுற்றத்துக்கு
சற்றும் எதிர்பாராத
வரவாக கிடைத்தது அவரது
சவமே..........................

மாலையும் காயவில்லை
மனையாளின் தாலியும்
காயவில்லை
அதற்க்கு முன்பே
காய்ந்தது அவளது
கணவனின் கட்டுடல்
ஏனோ............


தன் குடும்பம் என்று
மகிழ்ந்தவளுக்கு
தான் மட்டும் தனித்தக் குடும்பம் என
மாறிய மர்மம்
ஏனோ...................


கட்டியவனை கட்டியழ
கண்களிருந்தும் கண்ணீர்
மட்டும் இல்லாமல்
போனது ஏனோ?..............


நினைத்து நினைத்து
அழுது அழுது
கரைக்க நினைத்தது
அவனின் நினைவுகளை தான்
என்றாலும் ,
கரைந்தது அவளின்
இதயமும் கூடவே>>>>>>>>>>>>>>>>>>

எத்தனை நாட்கள்
இத்தனை துன்பம்
என எண்ணிய
இதயத்துக்கு
ஆறுதலாய் வந்தது
மறுமணம் எனும்
மருந்து !!!!!!!!!!!!!!!!!!!!!!!


மருந்து என எண்ணிய
அவளின் இதயத்தை
காலம் கனியக் கனிய
மருந்தும் மதுரம்தாம்
என எண்ண வைத்தது
மறுமணம்
என்ற உறவு **********

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (8-Aug-16, 9:59 pm)
பார்வை : 242

மேலே