பூமி தரும் பாடம்

பூக்கள்
பூத்து குலுங்குவதும்
இப்பூமியில் தான்

பூகம்பங்கள்
வெடித்து பிளப்பதும்
இப்பூமியில் தான்

பனி மலைகள்
உருகி செரிவதும்
இப்பூமியில் தான்

எரி மலைகள்
வெடித்து சிதறுவதும்
இப்பூமியில் தான்

சோலை வனங்கள்
செழித்து சிறப்பதும்
இப்பூமியில் தான்

பாலை வனங்கள்
வறண்டு கிடப்பதும்
இப்பூமியில் தான்

ஆற்று நீர்
கரை புரண்டு ஓடுவதும்
இப்பூமியில் தான்

கானல் நீர்
காணாமல் மறைந்து போவதும்
இப்பூமியில் தான்

பார் மனிதா!

மண்ணை பார்த்து
உன்னை மாற்றி கொள்

நாம் வாழ
ஓர் இடமட்டுமல்ல இப்பூமி
நம் வாழ்க்கைக்கு
ஓர் பாடம் இப்பூமி !!!!!!!!

எழுதியவர் : (8-Aug-16, 8:24 pm)
Tanglish : poomi tharum paadam
பார்வை : 81

மேலே