தெருவோர தேவதை
வேலி தாண்டியதால்
தீ வேலிக்குள் நித்திரை
சேலை கலையும் பத்தினியின்
விழி ஓரம் ஏக்கம்
நேற்றியில் குங்குமம் இட்டு
தன்னை உரிமையோடு அணைத்திடும்
தன்னவனுக்காக விழி நோக்கிய பார்வை
தன் மனக் கோலங்களை
அவன் மார்போடு வரைய
இவள் கண்ட கனவுகள்
பழித்திடுமோயென கனமும்
உயிர் அறுத்தலுக்கு விடுதலைக் கொடுக்கிறாள்
”கனவுகள் கலைக்கப்பட்ட
இவள் கண்ணீர் துளிகள்
புவியில் சிந்தி ஓடினால்
செழித்திடுமோ அதுவும் கங்கையென”