கயவன்
பெண் உருவமுள்ள மரப்பாவையைக் கண்டு இரசித்து
கவிதை வடித்தான் கவிஞன்...
பாழாய்ப் போன பட்டமரத்தை பாவையாக்கியவன்
தட்சுக் கலைஞன்...
இளம் பாவையின் தத்துரூபம் கண்டு
உயிருள்ள பெண்னென நினைத்து வியந்து
பட்டாடை நெய்து கொண்டு வந்து
அணிவித்து அழகுப்பார்த்தான்... தந்தை
அச்சம் மடம் நாணம் கொண்டப் பெண்ணாய்...
எனை மாற்றியமைத்தவன் இளைஞன்...
என் முழு அழகையும் அடைய நினைத்தான்
ஓர் காமுகன்...
ஆதலால்... என்னைத் தூக்கிச் சென்று...
கதறக் கதற கற்பழித்தான்...
அவனை யாரென்று கேட்டால்
மனிதன் என்கிறான்...!