கைப்பேசி
அறிவியலின் வளர்ச்சியினால்
ஆனவமாய் திரிபவள் நீ-
உனது அட்டகாசம்
தாங்க முடியவில்லை
தரணியிலே..
தகவல் பரிமார வந்த
உன்னால் இங்கு
தவறுகளின் தலைவிரிப்பு
ஏராளம்..
உன்னோடு இணையம்
காதல் கொண்ட நாள்
முகம் பார்த்து பழகிய உறவுகள்
விரல்நகம் பார்த்து நாட்கள்
நகர்த்துகின்றன..
கைக்கோர்த்து நடந்த உறவுகள்
இன்று கை வேர்த்து நடக்கின்றன..
உள்ளங்கையில் உனது
உராய்வு அதிகரித்ததால்..
உன் கவர்ச்சியினால்
பலவற்றைக் கோட்டைவிட்ட
உனது பக்கத்தர்கள் அதிகம்..
கையில் அடங்கும் உன்னைப்
பையில் வைக்க யாரும்
விரும்புவதில்லை
நாளுக்கு நாள்
மெலிந்திடும் உன்னால்...
மதி மயங்குகிறது
மானிடக் கூட்டம்..
நல்ல உறவோடு
கள்ள உறவும்
உன்னால்இங்கு
கலைக்கட்டி நிற்கிறது..
உலகத்தைச் சுருக்கி
உயிர்களை வதைக்கும் நீ
ஒரு மாயக்காரி..