சர்வமத ஊர்வலம் செல் பிள்ளையாரே

ஆற்றங்கரை ஓரம் அமர்ந்த பிள்ளையாரப்பா
ஆண்டாண்டாய் நோட்டமிடும் ரோமியோ நீதானப்பா
இளவட்டுகள் வளைய வளைய சுற்றினும்
இன்றுவரை பிரம்மச்சாரி நீதானப்பா

வேலவன் காதலுக்கு பச்சைக்கொடி ஆட்டி
வேழமுகம் காட்டி குறமகளை விரட்டி
சிங்காரவள்ளியை சேர்த்து வைத்தாய் கணக்காய்
சிக்கவில்லையே இதுவரை ஒருபெண்ணும் உனக்காய்

அப்பன் உன்தலை கொய்ததால் ஆனைமுகன் ஆனாய்
அடியவர்க்கு அருள்புரிந்திட ஐங்கரன் ஆனாய்
அம்மையப்பன் உலகென்று ஆதிசிவம் சுற்றி
அழகு சுப்ரமணியனுக்கு ஞானகுரு ஆனாய்

வெட்டவெளி வீதியெங்கும் கோவில் கொள்கிறாய்
வெட்டிப்பயல்களை உனக்கு ஆண்டி ஆக்குகிறாய்
தொப்பை நிறைக்க கொழுக்கட்டை திண்று திளைக்கிறாய்
குப்பை மேட்டு எருக்கம்பூவையும் ஏற்று மகிழ்கிறாய்

நத்தையாய் நகரும் மூஞ்செலி வாகனனே
வித்தைக்கு ஆரம்பசுழியாகி உகந்தவனே
சங்கடங்கள் வாராமல் சன்னதியிருந்துப் புறப்பட்டு
சதுர்த்தித் திருநாளில் சர்வமத ஊர்வலம் வந்திடுவாய்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அதுதா (10-Aug-16, 7:08 pm)
பார்வை : 143

மேலே