அவள் அழகி
அவள் அழகை பற்றி
அறிந்து தானோ நிலவு கூட
வெட்கத்தில் பகலில்
வெளி வராது இரவில்
வருகிறது கள்ளத்தனமாய்
அவள் அழகை ரசிக்க !
அவளின் கருமேக கூந்தலை கண்ட
ஆதவனும் ஒரு கணம்
ஏமாந்து போய் ஓடி ஒளிகிறான்
ஏமாளி அவன் இருள்
வந்ததோ என எண்ணி !
கருவிழி உளி கொண்டு
கரும்பறை என் மனம் அதை
காதல் சிலையாய் வடித்த
காதல் சிற்பி அவள்
ஏழு வண்ணம் கொண்டிராத
அழகு கரு வண்ணம் கொண்ட
வானவில்லின் வளைவு அவள்
புருவம்
வார்த்தை இல்லை இனி
தமிழில் அவள் தேகம் கொண்ட
வளைவு நெளிவுகள்
வனப்பை வர்ணிக்க எனக்கு !
மை வைத்து ஆணை மயக்கும்
மாந்திரிகம் நம்பவில்லை என்
மனம் மை கொண்டு என்னை
மயக்கும் அவள் கரு இமையை
காணும் முன் !
இரக்கம் கொண்டு பல
உலகழகி போட்டிகளை
உதறி தள்ளினாள் இல்லை என்றால்
பறிபோய் இருக்கும்
பல உலக அழகிகளின்
பட்டங்கள் இவளால் !