முகமறியா காதல்

முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முழுமையான அன்பிற்கு..
காலம் கனியும் வரை
காத்திருந்து என்ன பயன்..??
கவலைகள் மட்டுமே
நெஞ்சுக்குள்ளே..
முகம் பார்த்து பழகி மட்டும்
வருவதில்லை காதல்..
உள்மனதை உணர்ச்சியால்
தொடுவதே
உண்மை காதல்..
என் கவிதையை காதலிக்கிறேன்
என்றவள்
காகிதத்தில் எழுதினால்
கசங்கி விடுமே என்று
என் இதயத்தில் எழுதி வைத்தாய்..
எப்படி அழிக்க முடியும்
உன்னையும் உன் நினைவுகளையும்..
கண்ணிற்கு மையிட்ட பெண்ணே
இதயத்தை பொய் இட்டு புதைக்காதே..
புதைந்தால் மண்ணோடு மக்கி போகும்
மனிதரல்ல காதல்..
மனதை முட்டி மோதி முளைத்திடும்
மகத்துவமே காதல்..
என் இறுதி மூச்சு
இதயம் தொட்டு செல்லும் தருணம் வரை
உன் நினைவில் வாழ்ந்திருப்பேன்..
நான் உணர்ந்த காதலை
நீயும் உணர்வாய் ஓர்நாள்..
என் கண்ணீரின் ஈரம் பட்டு
உன்னுள் தளிர் விடும் என் நினைவுகள்
"காதலாக"..
காத்திருக்கிறேன் நானும்
கன்னி உன் காதல் மொழி கேட்க..!!
இரவின் மடியில் தாலாட்டும்
நினைவுகளுடன்..
அன்புடன் அனாதை..
குட்டி..!!