மண்ணில் வந்த நிலவு

மண்ணில் வந்த நிலவு
விண்ணில் தோன்றிய தாரகை
மண்ணில் வந்துதித்தாள்...
தேவலோக ரம்பையாய்
அழகு ததும்பும் மங்கையாய்.....
கண்ணிரண்டும் கவிதையாய்
கன்னல் மொழி பேசுதோ...
காதிரண்டில் வளையங்கள்
காவியந்தான் படைக்குதோ...
அவள் புருவமதன் வளைவிலே
வானவில்லும் வீழ்ந்ததோ...
அவள் உடல் அதன் அளவில் தான்
பயித்தை அதுவும் தோற்குதோ.....
அவள் சிந்தும் சிரிப்பில் தான்
சில்லறையும் சிதறுதோ.....
அவள் உதிர்க்கும் சொல்லில் தான்
முத்துக்களும் சிப்பிக்குள் பதுங்குதோ...
அவள் நெற்றி வடிவில் தான்
பிறை சந்திரனும் தோற்குதோ..
அவள் அழகை கண்டதால் தான்
பகலவனும் மறையுதோ....
பெண்ணவளின் அழகை கண்டதும்
பூக்களும் வெட்கி போனதோ...
இவள் மொத்த அழகை பார்த்ததும்
பிரமனும் மதிமயங்கி நின்றானே...!!