விதவை திருமணம்

இதயக் கதவு இரண்டை
இணைத்து வைத்து
போடும் புட்டுதான்...
திருமண வாழ்க்கையாகும்...!
பொருந்தாத மனமிரண்டை
நெடுந்தூர வாழ்க்கை பயணத்தில் ஏற்றி விட்டால்...
தேன் நிலவு ஆகுமா?
அப்படி அனுப்பி வைப்பது ஏனம்மா?
பொருந்தாத சாவி கொண்டு
திருட்டு பூட்டை திறப்பது போல்...
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல்
வாழ்வதுதான் இனிப்பு வாழ்க்கையாகுமா?
காதல் எனும் ஜன்னல் கதவை
திறக்கும் வரையிலே...
சூரிய ஒளியையும்...
தென்றல் காற்றையும் ...
பெறுவதென்பது கடினம்தான்...!
ஆதலால்...
இதயக் கதவை
காதல் சாவிகொண்டு
இதயத்தினுள் நுழைந்து
திறந்து பாருங்கள்...
இன்பமாய் மாறிடும்
உம் வாழ்வு...!
திருமண பந்தம்
சரியில்லை என்றால்...
விதவையாய் மாறிடும் வாழ்வு...!
அந்த விதவை திருமணத்தை
ஏற்பாடு செய்து விடாதீர்கள் ...தயவு செய்து...!