அழகு மீனாட்சி
காந்த மலர் சோலை - அவள்
கழுத்தில் போட்டிருந்தாள் மணிமாலை...
என் சிந்தையை - தினம்
ஆட்டிப்படைக்கும் சின்னத்திரை...
அவளொரு சிங்காரக் குயில் - தினம்
என் மனத்தெருவில் அசைந்தாடும் மயில்...
திரை மலர்ந்து பார்க்கும் தென்றலும்
தோகை விரித்தாடும்...
அவள் நடை நாடகம் போடும்
அன்ன நளினம் பார்த்து...!
கண் முன் தோன்றி -தினம்
என் கவனத்தை ஈர்க்கும் தொலைகாட்சியே...!
இளம் கவிஞனின் தூக்கத்தை களவாடியது போதும்...
தினம் உன் அழகு தூண்டிலில் சிக்க வைத்து
துடிக்கும் என்னிதயத்தை நிறுத்திப் பார்க்கும்
அழகு மீனாட்சியே...என் தமிழ் நாட்டு மின்னாட்சியே...
உன்னை பார்த்த நாள் முதலாய்...
என்னிடத்தில் இல்லை என் நெஞ்சம்....
எப்போது தருவாய் உன் மடி மீதில் தஞ்சம்...என
தினம் கேட்க துடிக்குது உள்ளம் ...
அருகில் வந்தால் வேர்க்குதே... என்னுடல் எல்லாம்...!
விட மாட்டேனே... என் எதிர் வீட்டுக் கடலில்
தினம் நீந்துகின்ற கயல் மீனை...!