வாட் ஈஸ் திஸ்

வீட்டில் வெட் க்ரைண்டரை மாற்றவேண்டுமாம். 'நமக்கு 75 வாட் போதுமா, அல்லது 149 வாட் வேண்டுமா?' என்று மனைவியார் கேட்டார். 'வாட் ஈஸ் திஸ்?' என்று திகைப்போடு நின்றேன்.

அப்புறம் ஒரு யோசனை வந்தது. 'இப்போதைய கிரைண்டர் எத்தனை வாட்?' என்று விசாரித்தேன்.

'யாருக்குத் தெரியும்?' என்று பதில் வந்தது.

அந்த கிரைண்டரைப் புரட்டிப்போட்டுப் பார்த்துவிட்டோம், வாட்டையும் காணோம், பாட்டையும் காணோம்.

தெரிந்தவர்கள் சொல்லுங்கள், சாதாரண வீட்டுப் பயன்பாட்டுக்கு எழுவத்தஞ்சு வாட் போதுமா?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (12-Aug-16, 1:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே