அழியாத நினைவு புரியாத நட்பு

என் அன்பு என்னும் கடலுக்குள் மீனாகி...
பின்பு என் கோபம் என்னும் பறவைக்கு இறையாகி....
உன் அழகிய பாச நெஞ்சத்துள்
என் கொடிய வார்த்தைகளை நான் தூவி.....
உன்னை என் நினைவுகளோடு ஏங்க வைத்து
நானோ உன் நினைவு இல்லாதது போல் நடித்து....
இனியும் இந்த வீராப்பு வேண்டாம்....
நம் நட்போ இன்னும் பல ஆண்டு பாராட்ட வேண்டும்.....
என் அன்பிற்காகவும் நான் பேசும் சில ஊமை வார்த்தைகாகவும் என் நினைவோடு வாழும் என் இனிய நட்புக்கு ஓர் செய்தி,
உன் தோழி மீண்டும் உன் நட்பிற்கு உயிர் கொடுத்து என் நினைவிற்கு விடை கொடுத்து ஓடோடி வந்துவிட்டாள்........