நிலவொளியில் ஓர் நிலவு

முகிழ்ந்திட்ட
முழுநிலவின்
முழுஒளியும்
கடலில்
பரவிடும்
இவ்விரவில்
முதிராத
கன்னியாம்
உதிராத
பூச்சரமாம்
சில்லென்ற
தென்றலும்
மேனியினை
தழுவிட
காதல்
விபத்தால்
கல்லான
நெஞ்சும்
காற்றில்
கரைந்திட
கண்டபடி
கற்பனைகள்
மனதில்
கலந்திட
எடுத்திட்ட
முடிவால்
தடுத்தும்
கேளாமல்
தனியே
வந்திருப்பது
தற்கொலை
செய்திடவா
தனிமையை
விரும்பியா
புரியாத
நிலையே
நமக்கு
நல்லதை
நினைப்போம்
நடந்தே
தீரும் ....
-----------------------
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Aug-16, 2:53 pm)
பார்வை : 411

மேலே