கஜல்

என் மொழியால் நான் உன்னைப் பாடுவேன்
நல் வழியில் மேலும் முன்னேறுவேன்

சொல், ஒலியைக் கொண்டால்தான் வாழ்வுரும்
நான் ஒரு சொல், உன்னாலே சீறுவேன்

என் உதயங்கள் தோன்றும் நேரமே
நீ ஒளியாய் வரவே தான் கோருவேன்

காதலிலே வாழ்வெல்லாம் செல்லவே
நான் கவிதைப் பாதையில் ஏறுவேன்

நீ பொருளாய் உள்ளாய் நம் காதலுக்கே
நான் இனிமேல் பாட்டாய் மாறுவேன்

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (13-Aug-16, 3:31 pm)
Tanglish : kajal
பார்வை : 81

மேலே