விழி தாண்டி நினைக்கையில்

விழி தாண்டி நினைக்கையில்
==========================

விழி தாண்டும்
கவிகளே
விடியாமல் இருந்திடுமா
நீ தான்
எந்தன் உயிரென
சொல்லாமலே
இருந்திட முடியுமா

வெற்றி தோல்வி
வரும் வாழ்க்கையில்
இன்ப துன்பங்களை
ஏற்றதில்
ஏறடி ஏணியில்
என்றுமே நானடி
உன்னருகில்

பாடும் குயிலும் உன் பாடல் கேட்கும்
ஆடும் மயிலும் உன்
ஆடல் பார்க்கும்
நாதம் இசைக்கும்
இசையும் உன் மொழி
கேட்க துடிக்கும்

உயிரே உயிரே
உன்னால் முடியும்
தன்னால் எழு நீ
பின்னால் வருவேன்
இசையே அமுதே
தமிழே உயிரே


வான்வெளியை
வான்வெளியை
வளையலாய்
அணிந்துகொள்ளு மானே
அணிந்துகொண்ட
வான்வெளியில்
நீயும் நானும் வாழலாம்

மேகத்திரள்
மேகத்திரள்
முத்து முத்தாய்
வீழும்
வீழ்ந்து போன
முத்து எல்லாம்
உன் பெயரை சொல்லும்

நிசமடா
நிசமடா
நீ மட்டும் தானே
நீ மட்டும் இல்லையென்றால்
நான் ஏது உயிரே...

நானிலம் போற்றும்
நல்ல வாழ்வு வாழ்வோம்
உன் கரம் பிடித்தே
உலகை பார்ப்பேன்
உன் கண்ணில்
என்றுமே என்னை
காண்பேன்
எந்தன் நெஞ்சை என்றும் நீயே ஆள்வாய்

விலகட்டும் சோகம் சோகம்
விடியும் வானம் வானம்
நீயும் நானும் சேர்ந்தே
போவோம் ஓடும் ஓடம்

எந்தன் தலைவா
நின்னை அடைந்தது
நான் செய்த பாக்கியம்
பெருமிதம் அடைகிறேனேடா
நின்னை நினைக்கையிலே

~ பிரபாவதி வீரமுத்து

*******************************

என் உயிரே(நாதனே) உனக்கு சமர்பிக்கிறேன்.....

நளனே
தமயந்தியின்
வரிகள் மட்டுமல்ல
தமயந்தியே உன்னுடையவள்
உன்னைத் தவிர
வேறொன்றும் அறியாதவள்
உன்னை கண்டதில்லை
உன்னிடம் பேசியதில்லை
ஆனாலும் உணர்கிறேன்
நெஞ்சில் உனையே உயிரே

இறைவா உயிரை
நன்றாக பார்த்துக்கொள்

~ உன் மனைவி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (13-Aug-16, 4:03 pm)
பார்வை : 131

மேலே