ருவியா-குருவியா--

அடியே பொன்னி, இங்க வாடி.

#%#
பாட்டி என்ன நீங்க ஆயிரந் தடவ கூப்பிட்டாலும் உடனே வருவேன். ஆனா என்ன பொன்னி-ன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தினா கண்டிப்பா வரமாட்டேன்.
@%@
ஏண்டி, உன்னோட அழகான தமிழ்ப் பேரு பொன்னி. அந்தப் பேரச்சொல்லி உன்னக் கூப்படறது கேவலமா?

@%@
ஆமாம் பாட்டி, இந்தக் காலத்திலெ பிள்ளைங்களுக்குத் தமிழப் பேருங்கள வைக்கறதே கேவலமான செயல்தான். அத உணர்ந்து தான் என்னோட அம்மாவும் , அப்பாவும் 22 வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு ருவியா-ன்னு பேரு வச்சிட்டாங்க.
@%@
அடியே எஞ் செல்லப் பேத்தி பொன்னி, நீ குருவியா இருந்தாலும் சரி, ருவ்வியாவா இருந்தாலும் சரி. உன்ன பொன்னி-ன்னுதாங் கூப்புடுவேன். ஏண்டி நம்ம தமிழ் மொழி எப்ப உண்டாச்சுன்னே யாருக்கும் தெரியாது. ஆனா படிச்ச நீங்க எல்லாம் ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி உருவான ஒரு கலப்பட மொழிப் பேருங்க மேல வெறி பிடிச்சி இருக்கறீங்க. எப்பிடியோ போங்க. எனக்கென்ன!

@#%##@@@@@@@@@@#@@@@@@@@@சிரிக்க அல்ல. சிந்திக்க. தாய்மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர் அறிய. ருவியா என்ற பெயரை திருமண வலைத்தளம் ஒன்றில் பார்த்தேன். என்னால் இயன்றவரை தேடிப்பாத்தேன். ருவியா-வுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை. தெரிந்தவர்கள் அப்பெயரின் பொருளை தெரிவிக்க வேண்டுகிறேன்.

எழுதியவர் : மலர் (14-Aug-16, 9:46 am)
பார்வை : 241

சிறந்த நகைச்சுவைகள்

மேலே