ஆனந்தயாழ் கண்ணீர் சிந்துகிறது

ஆனந்தயாழை மீட்டியவன் நீ

நெஞ்சில் வாளை ஏன் வீசினாய்

ராகங்களில் தேன்மழை கொட்டியவன் நீ

கண்களில் நீர்வீழ்ச்சியை ஏன் கொட்டுகிறாய்

காதுகளில் இன்னிசையாய் நுழைந்தவன் நீ

ஏன் இப்போது மரணகீதத்தை பாடுகிறாய்

பாடல்களில் இளமையை ஊட்டியவன் நீ

அதற்காக முதுமை வேண்டாம் என ஏன் முடிவு செய்தாய்

கவிதை அறைகளை கணக்கில்லாமல் கட்டியவன் நீ

இப்படி கல்லறையில் உறங்க நினைத்தது நியாயமில்லை

எழுதியவர் : கே . எஸ் .கோனேஸ்வரன் (14-Aug-16, 2:57 pm)
பார்வை : 89

மேலே