கண்ணீர் அஞ்சலி கவிஞர் நா முத்துகுமார்

கவிதைகள் மட்டுமே
எழுதியவன் இன்று
தானே ஓர்
காவியமாகி விட்டான் ....
ஆனந்த யாழை மீட்டியவன்
அழவைத்தான் இன்று
அனைத்து உள்ளங்களையும் ....
தமிழ் நெஞ்சங்களுக்காக
அழுதவன் இன்று
தமிழர்களை அழவைத்து
மறைந்துவிட்டான் .....
இயற்கையின் கொடுமை
இதனைவிட வேறுண்டா ....
நம் இதயங்களை மீட்டியவன்
நம் இதயத்தில் நிலைத்தான் !
பழனி குமார்
---------------------------------------------------------
---------------------------------------------------------
ஊரை நினைத்து
உறவை நினைத்து
உலகை நினைத்து
சிந்தையை செலவழித்து
சிந்தனையை எழுத்தாக்கி
பாடல்களை எழுதி
பார் முழுதும் பேசவைத்த
மாபெரும் கவிஞன் தன்
இறுதிபயனத்தைத்
தொடங்கி விட்டான் .....
மீண்டும் காண முடியுமா
இந்த சமுதாய கவிஞனை....
மறக்க முடியுமா...
இந்த தமிழனை....கண்ணீர் மறைக்கிறது....
மேலும் எழுதிட முடியாமல்
தடுக்கிறது....
பழனி குமார்