காதல் கரைந்துவிட்டதா
கண்ணீரின் மதிப்புகளை
காதலால் உணர்த்திவிட்டாய் - இன்று
காதலின் மதிப்புகளை
காரிகையே! எங்கறிவேன்?
உதிரத்தின் வேகத்தை
உள்ளுக்குள் நீஅறிந்தாய் - இன்று
உதிரத்தின் வெடிப்புகளை
உயிரே! நானெறியேன்!!
காற்றின் அலைவரிசையில்
காதெல்லாம் உன்குரலே - இனி
காதலின் அலைவரிசையில்
காலமெல்லாம் என்அழுகுரலே!
நீபாடும் பாடல்களை
நான்கேட்டு தூங்கிருந்தேன் - இன்று
நீபாடும் பாடலில்லை
நெஞ்சுதூங்க வழியுமில்லை!
கண்திறந்து நானிருந்தும்
கண்பார்க்க முடியவில்லை - ஏனோ
கண்ணீர்துளி மறைப்பதனால்
கண்மணியே! தெரியவில்லை!
உனக்குள்ளே நானிருந்த
அக்காலம் அழிந்துவிட்டதா? -அடி
உனக்குள்ளே குடியிருந்த
அக்காதல் மறைந்துவிட்டதா?
கேஷ்மீரின் கொடூரத்தை
கண்ணுக்குள் நிறுத்தாதே -பெண்ணே
கால்பட்ட பூவாய்நான்
நசுங்குகிறேன் மிதிக்காதே!