வான வில்

நீல வானம் பசும் பூமி

இரண்டையும் தொட்டு

வளைந்து கட்சி தரும்

எழிலே வண்ண வண்ண

வான வில்லே

மழைதரும் மேகம் மீது

ஆதவன் கிரணங்கள்

ஆசைகொண்டு தழுவிட

விந்தையாய் வானில்

தோன்றி மறைவதேன்

வண்ண வண்ண

வான வில்லே


அப்படியே அங்கேயே

நீ வானில் தங்கிவிட்டால்

உன்னைப் பார்த்து

மகிழ்வாரோ மாந்தர்கள்!

என்று நினைத்தாயோ

வண்ண வண்ண

வான வில்லே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-16, 11:50 am)
Tanglish : vaana vil
பார்வை : 146

மேலே