தினம் ஒரு பாட்டு இயற்கை - 30 = 194

சாலைவோர பூக்களெல்லாம் சங்கீதமழையில் நனைகின்றது
வாகனங்களின் பெருத்தசத்தம் செழிப்பறையை கிழிக்கின்றது
இரவென்றும் பகலென்றும் இடைவிடாது இன்னிசை நாடகங்கள்
நடத்துகின்ற வாகனங்கள் நாட்டின் நன்மை விரும்பிகள்

ஒன்றோடு ஒன்று ஓவர்டேக் செய்வதால் கொடூர விபத்துகள்
நின்று நிதானமாக ஓட்டிச் சென்றால் தவிர்க்கலாம் ஆபத்துகள்
நன்றாக டிரைவிங் தெரிந்தவர்கூட சிலசமயம் நிதானம் இழக்கின்றார்
அவர் நிதானம் இழந்ததாலே பலபேர் மயாணம் செல்கின்றார்

வாகன இடைவெளி பத்து மீட்டர் படித்தால் மட்டும் பத்தாது
வண்டியை இடிப்பதுபோல் ஓட்டிச்சென்று பிரேக் போடக்கூடாது
சாலையில் செல்லும்போது சாலைவிதிகளை மீறக்கூடாது
போக்குவரத்து காவலரை பொறுமை இழக்க வைக்கக்கூடாது

இன்பம் பொங்கும் உலகமிது இதில் துன்பமில்லாமல் வாழ்வேது?
வாழும்வரை விபத்துகளில்லாமல் வண்டிகள் ஓட்ட சபதம் எடு..!
ஓட்டுனர்களே ! நடத்துனர்களே ! பயணிகள் உயிர்கள் உம்கையில்;
பார்த்து நீங்கள் சென்றால்தான் நாங்கள் பரலோகத்தை தவிர்க்க முடியும் !

எழுதியவர் : சாய்மாறன் (16-Aug-16, 5:49 pm)
பார்வை : 98

மேலே