சுதந்திரம் இல்லை இது

தீண்டாமை ஒழிந்து
சாதி சமயம் உடைந்து
சமத்துவம் பிறந்து
சங்கடங்கள் தீர்ந்து
சத்தியமே நிலைக்கும்
என்று காத்திருந்து காத்திருந்து
ஏங்கி சாகும் எனக்கும்
என் நாட்டு மக்களுக்கும்
என்று தனியுமோ
இந்த சுதந்திர தாகம்.......

நூற்றாண்டுகள் அடிமையாய் கிடந்தது
நூறாயிரம் பேர் வாழ்விழந்து
வந்த சுதந்திரம்
அடிமை ஆதிக்கம் கொண்ட
ஆணவக்காரர்களின் கையில் சிக்கி
அரை நொடியில் சிதைந்து
போன எங்கள் சமத்துவ சுதந்திர தாகம்
என்று தனியுமோ
என் திரு நாட்டில் ..........

பல பேர் உழத்திட அதில்
சில பேர் திளைத்திட அதனால்
பஞ்சத்தின் பிடியில் சிக்கி
பசின் பினியில் மடியும்
என் நாட்டு உழைப்பாளிகளின்
எதிர் சுரண்டல் என்று ஒழிந்து
உழைப்பாளிகளின் நலச்சுதந்திரம் தாகம்
என்று தனியுமோ
என் திரு நாட்டில் ........

வல்லரசு ஆனால் போதுமா
வயிற்றுக்கு உணவு வலிக்கும்
விவசாயிகளின் வாழ்க்கை நலம் கண்டு
விரிவடையுமா என் வருங்கால சுதந்திர இந்தியாவில் .........

நாளைய தூண்கள்
நாளுக்கு நாள் அனாதைகளாக
அழிக்கப்படும் அந்த பிஞ்சு
குழந்தைகளின் சுதந்திரம் என்று தனியுமோ
என் திரு நாட்டில் !

உண்மையில் சுதந்திரம் பெற்றோமா ? இவைகள் தீராமல்

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (16-Aug-16, 2:01 pm)
பார்வை : 980

மேலே