காசேதான் கடவுளடா
மனுஷன மனுஷனா
மதிக்கத் தேவ
நிறையா நிறையா சில்லர
இல்லன்னா உலகம்
உனக்கும் கட்டிடும்
மனசோட சேத்து கல்லற
வருவாய பாத்து
வரும் சொந்தம் நூறும்
நெசமுன்னு நீதான் நம்புற
தெருநாயுங்கூட
வெறி கொண்டு பாயும்
வெறுங்கையப் பாத்து,ஏன் வெம்புற?
அடபோடா எவனும்
யோக்கியனில்ல
நீ மட்டும் ஏன் ரொம்ப துள்ளுற
துணிஞ்சவனுக்கே
தலவாழ சாப்பாடு
வெறும் வாய எதுக்கு மெல்லுற?
பணம்காசுதானிங்க
எல்லாமுமாச்சினு தெரிஞ்சும்
நீ பாறய முட்டுற
திறக்காத கதவில்ல
இத நம்பித்தானின்னும்
துவளாம உன்னையே தட்டுற
நடுவால நீயும்
நின்னாலுங்கூட தெரியாது
காசுல்ல கண்ணுக்கு
நரி வேஷம் போடு
நல்லாவே வருவ
வேறில்ல வழி வர முன்னுக்கு..!