மையின் மகிமை
மையின் மகிமை
வெண்மை சமாதானம்
கருமை ஒருவித கலை
தனிமை சுயபரிசோதனை
வறுமை அழையா விருந்தாளி
பெருமை பேரின்பம்
சிறுமை சிற்றின்பம்
பொறுமை உலகாளும்
உவமை கவியாக்கும்
வலிமை போராடும்
வாய்மை வெல்லும் (அறிந்ததே)
ஒற்றுமை வெற்றியின் அறிகுறி
வேற்றுமை விளைவிக்கும் பாதகம்
நேர்மை ஆளுமை
வெறுமை மரணம்