கவியின் இழப்பு
ஒரு கவி வரலாறே
புதைகுழி புகுகின்றது...
கண்ணீரை தாண்டிய
ஓர் சோகம் - என்
கண்களுக்குள் புதைகின்றது!..
தமிழை உன் திறமையால்
அலங்கரித்த தமிழ் மகனே..
பாதித் தூரத்திலே - உன்
பயணம் முடக்கப்பட்டு,
போகின்றாய் முத்துக்குமரா...
நீ கரம் பற்றிய எழுதுகோல்
கலங்கி தவிக்குது வெறுமையில்...
நீ மட்டும் மீளாப் பயணம்
தொடங்கிவிட்டாய் தனிமையில்...
விதியை நினைக்கையில்
எனக்கு எல்லையற்ற கோபம்...
இடைவழியிலே உனை பறித்தது
அது தமிழுக்கு செய்த பாவம்!..

