தத்துவங்கள்-03

உறவு- முட்டையிடும் குயிலின் கூண்டுக்குள் காக்கைக்கு எங்கு இடம்

நல்லோர் சொற்கள் கோரை புல் போல சில சமயம் நிராகரிக்கப்பட்டாலும் துளிர் விடுகின்றன

ஊனக் கண் பார்வையில் சீதையும் கற்பழிந்தவள்

இறை தேடும் குஞ்சுக்கு தன் இரைப்பையின் உணவைக் கொடுக்கும் சிட்டு குருவின் வாழ்க்கையும் மனித வாழ்க்கையும் ஒன்றல்ல

தன்னை அறியா வழிப் போக்கன் பாதையில் ஆயிரம் பொற்காசுகள்

மன்னன் கைபை ஓட்டையில் இருக்கையில் மக்கள் கை எவ்வாறு நிரம்பும்

காதலை ஊடல் என்பவன் காதல் பால் குடிக்கா பச்சிளம் குழந்தை

வாழ்க்கை நெறி தவறாது வாழ எறும்பு போல் கட்டுப்பாடு வேண்டும்

நான்-உலக நாடக மேடையில் நான் மட்டும் தனித்து இல்லை

குடிகாரன் கூற்றிலும் பொருள் இருக்கும்
ஆராய்ந்து பார்க்காத கண்ணுக்குப் நல்லவர் கூற்றும் புலப்படாது

சிரித்துக் கொண்டே இருப்பவர் சிந்தை கெட்டவர் அல்ல
சிரிக்கத் தெரியாத ஜடங்களுக்கு ஆசான்கள்

தன்னைக் கொத்தி கிழிக்கும் பறவைகள்,வெட்டிக் கொள்ளும் மனிதர்களை ஏளனமாக பாராது இழை பார நிழல் தருகிற மரமும் நீதி தவறாத மன்னர்களின் செங்கோலும் ஒன்று

ஓடி ஓடி உழைப்பவன் சேமிப்பு கிடங்கின் ஓட்டையை மறந்து விட்டான்

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (17-Aug-16, 6:58 am)
பார்வை : 294

மேலே