சொந்தம் ஒன்றை தேடாத உறவு 555

மனிதன்...

வாழும் பூமி சொந்தமில்லை இருந்தும்
அடித்துக்கொள்கிறோம் மண்ணிற்கு...

வான்நிலா சொந்தமில்லை
கைநீட்டி அழைக்கும் மழலை...

பேருந்து சொந்தமில்லை
அடித்துக்கொள்கிறோம் சீட்டிற்கு...

கூந்தல் சொந்தமில்லை
மலர்கிறது காகித வண்ணமலர்கள்...

பாலைவன கள்ளிச்செடிக்கு
மழைத்துளிகள் சொந்தமில்லை...

எதிர்பார்க்கும் வானத்தை
எப்போதும்...

காற்று சொந்தமில்லை இருந்தும்
சுவாசித்துகொண்டு இருக்கிறோம்...

நாளைய விடியல்
சொந்தமில்லை...

நாளைய தேவைக்காக
ஓடுகிறோம்...

பருகும் நீர்கூட சொந்தமில்லை
அணைபோட்டு தடுக்கிறோம்...

சொந்தமில்லா ஒன்றை
சொந்த கொண்டாடுகிறோம்...

உயிருள்ள சொந்தங்களை
ஏன் வெறுக்கிறோம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Aug-16, 8:40 pm)
பார்வை : 238

மேலே