பெண்ணே முழித்திடு
போரிடும் பெண்களை எல்லாம்
பெருமைக்காய் சிறைப்படுத்தும்
ஆண்வர்க்கம் புரிகிறதா உன்
ஆணவத்தின் மிடுக்கதை
சிறு மோகத்துக்கும் மையலுக்கும்
சிக்கிய பெண்கள் எல்லாம்
சிறையுடைத்து பறக்கும் காலம் இது
சிந்தித்து வழிவிட்டு சிறப்பாய் வாழு
போரிடும் பறவையெல்லாம்
போகுது புது வெளியுலகம்
பயந்து ஒதுக்கியவை எல்லாம்
பாதகர்கள் கைகளிலே
சிக்கிய பறவை சிறைப்படுத்தப்பட்டு
சில்லறை தனமாக வேட்டையாடப்படுகிறது
சினம் கொடு உடைத்திடு பெண்ணே
சிறப்பான உலகமத்தில் நீ தான் தங்கமயில்
ஆணடவன் பதிப்பிலே ஆணுக்கு நிகர் பெண்ணே
ஆண்ட மன்னர்கள் அறிவின்றி பகுத்ததை
அழித்திட்டு மேல் நோக்கி எழுந்து வா
அன்பினால் ஒன்றிணைவோம் சமத்துவத்துக்காய்