காதல் !!
கவிதைக்கு வார்த்தைகள் தேடியபோது
கவிதையாகவே இருந்தாய் நீ
நித்தம் நித்தம் நூறு கனவு
நிலவனமாய் நீளுது என் இரவு
மரணம் இல்லா மரண வலி ....
விதியின் கையில் மாட்டி தவிக்கும் என்னக்கு
உன்னது பாடல்கள் மட்டுமே இந்த இருளில் தாலாட்டு...
கரம் உன்னை பிடிப்பது காலத்தின் சாட்சி
கடல் கடந்து வருவதுதான் நம் காதலின் ஆட்சி
நிழலியிலும் நிஜத்திலும் நீயாய் இருக்க...
கண்களுக்கும் இமைகளும் போட்டி நடக்க
இனியவை நடக்குமென
இதயத்துக்குள் இருக்கும் நீ சொல்ல
கண்களில் ஓடும் கண்ணீரை கரங்கள் துடைக்க ...
விழிகளை மூடினேன் நித்தரை கொள்ள அல்ல
கனவிலாவது உன் முகம் பார்கல்லாம்
என்ற ஏக்கத்தில் ...