இன்னும் ஒரு பெண் சிசு கொலை கேட்பார் இலையோ அவனியில்
இன்றைய செய்தியில் ஒரு செய்தி
அதைப் படித்து துடி துடித்தேன்
ஆயினும் செய்ய ஏதும் இன்றி தவித்தேன்
ஒரு தந்தை பெற்ற சேயை
பெண் சிசுவை தன மனைவி
மற்றும் மூத்த பெண் பிள்ளை முன்னே
அந்த பால் மணம் மாற குழந்தை
பெண்ணாய் பிறந்தாளே என்ற
ஒரே காரணத்தால் வெகுண்டு
ஈவு இரக்கமின்றி வீசி எறிந்தான்
பாவம் குழந்தை தூணில் அடிபட்டு
மண்டை உடைந்து துடி துடித்து
பரிதாபமாய் பெற்றவள் கதற
உயிர் விட்டது
இந்த கலியுக கம்சனாம் மனிதர்களுக்கு
யார் தணடனைத் தருவார்
என்ன தண்டனைத் தான் தருவார்
மன்னைத் தாய் என்றும்
மொழியைத் தாய் என்றும்
இன்னும் தாய் என்று
தெய்வங்கள் பல வற்றை
சக்தியாய் கோவிலில் கும்பிட்டு
என்ன பயன்?
பெண் சுமந்தாள் தானே
உலகில் மக்கள் ஜனத்தொகை
இதில் ஆண் என்ன பெண் என்ன
இந்த ஆண் வர்க்க ஆணவம்
உலகை ஒரு நாள் அழித்திடும்
பெண்ணாய் போற்றி காக்க தவறினால்
கலியுக துச்சாதனரை ,கம்சனை
அறிந்து அவர்கள் செயலை
முளையிலேயே கிள்ளி எறிவோம்
பெண் சிசுக்கள் கொலையை
தடுத்திடுவோம்
தவறு செய்வோரை தண்டிப்போம்